ADDED : மார் 05, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கர்நாடகாவின் காவிரி குறுக்கே கே.ஆர்.எஸ்., அணை, அதன் துணையாறுகள் குறுக்கே கபினி, ேஹரங்கி, ஹேமாவதி அணைகள் உள்ளன. கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பினால், உபரிநீர் நேரடியாக மேட்டூர் அணைக்கு வரும்.
கே.ஆர்.எஸ்., கபினி,ஹேரங்கி, ஹேமாவதி அணைகளின் மொத்த நீர்மட்டம் முறையே, 124.5, 65, 129, 117 அடி, நீர் இருப்பு, 49.5, 19.5, 8.5, 37.10 டி.எம்.சி., ஆகும். தற்போது காவிரி, அதன் துணையாறுகளின் நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி நீடிக்கிறது. இதனால் கடந்த பிப்., 1ல் முறையே, 391, 190, 160, 356 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 120, 82, 13, 84 கனஅடியாக சரிந்தது.
- நமது நிருபர் -