/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு
/
கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு
கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு
கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கம்கருத்துகேட்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு
ADDED : டிச 24, 2024 08:00 AM
மேட்டூர்: மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலை விரிவாக்கத்துக்காக, நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து சொல்ல குவிந்த மக்-களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர், ராமன்நகரில் கெம்பிளாஸ்ட் ரசா-யன ஆலை உள்ளது. இங்குள்ள ஒன்றாவது ஆலையில், குளிர்ப-தன வாயு உற்பத்தி அலகை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்ட-மிட்டுள்ளது. மேலும், இரண்டாவது அலகில் தயார் செய்யப்-படும் பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.,) பேஸ்ட் ரெசின் உற்-பத்தியை ஆண்டுக்கு, 66 ஆயிரம் டன்னில் இருந்து, 1.45 லட்சம் டன்னாக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதற்கு கூடுதலாக, 300 கோடி ரூபாய் செலவாகும்.
ஆலை விரிவாக்கத்தின் மூலம், 150 ஊழியர்களுக்கு நிரந்தரமா-கவும், 200 ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் வேலை-வாய்ப்பு கிடைக்கும். ஆலை விரிவாக்கம் செய்யவும், உற்பத்-தியை அதிகரிக்கவும், சுற்றுப்பகுதி மக்களின் கருத்துகளை மாசு-கட்டுப்பாடு வாரியம் கேட்டு, அவர்களின் விருப்பத்தை பொறுத்து வாரியம் அனுமதி வழங்கும். அதன்படி நேற்று, சேலம் கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட தலைவர் பிருந்தாதேவி தலைமையில், மேட்டூர், கருமலைக்-கூடல் தனியார் மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, ராஜ்யசபா எம்.பி.,சந்திர-சேகரன், எம்.எல்.ஏ., சதாசிவம் பங்கேற்றனர்.மேட்டூர் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்திபன், வீரக்கல்புதுார், பி.என்.பட்டி டவுன் பஞ்., தி.மு.க.,- அ.தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்-டத்தில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொது-மக்கள் பலர் ஆலை சுற்றுப்பகுதியில் உள்ள பி.என்.பட்டி, வீரக்-கல்புதுார் டவுன்பஞ்., கோனுார் ஊராட்சியில் நிலத்தடி நீர் பாதிக்-கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதித்துள்-ளனர். ஆலை சுற்றுப்பகுதியில் மக்கள் பாதிக்கும் நிலையில், வெளிமாவட்டத்தில் இருந்து வரும் ஊழியர்களுக்கு வேலை-வாய்ப்பு வழங்கப்படுகிறது.விரிவாக்கம் செய்யப்படும் ஆலையின், சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பொறியியல் படித்த இளைஞர்கள் உள்ளனர். அவர்க-ளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனையே பெரும்பாலான பொதுமக்களும் கூறினர். அப்போது கருத்து சொல்ல ஏராளமானோர் முன்பகுதிக்கு சென்றதால், அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் பேசு-வதற்கு, கலெக்டர் பிருந்தாதேவி அனுமதி வழங்கினார். ஆலை தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, இரண்டரை மணி நேரம் நடந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு பின்பு கலெக்டர் மற்றும் அலுவலர்கள் புறப்பட்டு சென்றனர்.