ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் அகிலேஷ், 29, தினேஷ், 37. இவர்கள், தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் கட்டட தொழிலாளியாக வேலை செய்தனர். நேற்று மதியம், 3:00 மணிக்கு, இருவரும் ஸ்கூட்டி மொபட்டில், பொம்மிடியை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஹெல்மெட் அணிந்தபடி, அகிலேஷ் ஓட்டினார்.
சேலம் விமான நிலையம் எதிரே சென்றபோது, முன்புறம் சென்ற சரக்கு லாரியை முந்த முயன்றார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், லாரி சக்கரத்தில் சிக்கிய அகிலேஷ், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தினேஷ் காயம் அடைந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.