/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டி நகையை பறித்த சூளை தொழிலாளி கைது
/
மூதாட்டி நகையை பறித்த சூளை தொழிலாளி கைது
ADDED : மே 12, 2025 02:47 AM
ஓமலுார்: காடையாம்பட்டி, தின்னப்பட்டியை சேர்ந்தவர் இந்திராணி, 79. இவர் மகள் கலைச்செல்வியுடன், கடந்த, 6ல், பண்ணப்பட்டி புறப்பட்டார். தின்னப்பட்டி ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கி இருக்க, கலைச்செல்வி தண்ணீரை கடந்து பண்ணப்பட்டிக்கு சென்றார். பாலத்தில் இருந்த
இந்திராணி, அந்த வழியே சென்றவர்களிடம் உதவி கேட்டார். அப்போது ஒருவர், இந்திராணியை, பாலத்தை தாண்டி இறக்கி விட்டார்.
பின், 'நான் ரவுடி' என மிரட்டி, இந்திராணி அணிந்திருந்த தங்கத்-தோடை கழற்றச்சொல்லி மிரட்டி பறித்துச்சென்றார். இதுகுறித்து நேற்று இந்திராணி புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் விசாரித்-ததில், பண்ணப்பட்டி, காங்கியானுாரை சேர்ந்த, செங்கல் சூளை தொழிலாளி ரீனு, 32, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்து தோடை மீட்டனர்.