/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தைப்பூச திருவிழா கடைகளில் சமையலறை பொருள் விற்பனை
/
தைப்பூச திருவிழா கடைகளில் சமையலறை பொருள் விற்பனை
ADDED : பிப் 17, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்-தசாமி கோவில் தைப்பூச திருவிழாவை ஒட்டி, 100க்கும் மேற்-பட்ட தற்காலிக கடைகள், ஒரு மாதம் வரை வைப்பர்.
அதன்படி தின்பண்டங்களுக்கு அடுத்து, பாரம்பரிய சமையலறை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது.
குறிப்பாக கருங்காலி, கருவேலம், செலவாடை மரத்தால் செய்-யப்பட்ட, 'உலக்கை', இரும்பு, கல்லால் செய்யப்பட்ட 'பணியார சட்டி', அறுமனை, கத்தி, தோசைக்கல், வடசட்டி, இடியாப்பம் பிழியும் திருகி உள்ளிட்ட பொருட்கள், 50 முதல், 1,000 ரூபாய் வரை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கந்தசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரும்பி வாங்கி செல்-கின்றனர்.