/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருத்தரித்தல் சிகிச்சையில் கே.என்.ராவ் மருத்துவர் சாதனை
/
கருத்தரித்தல் சிகிச்சையில் கே.என்.ராவ் மருத்துவர் சாதனை
கருத்தரித்தல் சிகிச்சையில் கே.என்.ராவ் மருத்துவர் சாதனை
கருத்தரித்தல் சிகிச்சையில் கே.என்.ராவ் மருத்துவர் சாதனை
ADDED : செப் 19, 2024 07:40 AM
சேலம்: சேலம், ஓமலுார் பிரதான சாலையில் உள்ள கே.என்.ராவ் மருத்துவமனை வளாகத்தில், 'தி ராவ் பெர்டிலிட்டி பவுண்டேசன்' எனும், அதிநவீன கருத்தரித்தல் மையம் செயல்படுகிறது. அங்கு வந்த, 45 வயது பெண்ணுக்கு அதிநவீன கருத்தரித்தல் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து சேலம் பாலிகிளினிக் இயக்குனர் ராஷ்மிராவ் கூறுகையில், ''திருமணமாகி, 25 ஆண்டுகள் குழந்தை இல்லாத பெண், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மகப்பேறு காலங்களில் வரும் நீரிழிவு
நோய்க்குரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் அஸ்வின் ராவ், பிரவீன், ரதீஸ், தினேஷ்ராம் ஆகியோர், பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அப்பெண்ணுக்கு, 2.85 கிலோவில், சுகப்பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தற்போது தாயும், குழந்தையும் நல்ல முறையில் உள்ளனர்,'' என்றார்.