/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
ADDED : ஜூலை 31, 2025 02:04 AM
சேலம், சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி, சென்னையை சேர்ந்த, 3 முன்னணி தொழில் நிறுவனங்களான கோனே எலிவேட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கே7 கம்ப்யூட்டிங் பிரைவேட் லிமிடெட் மற்றும் எல் அண்ட் டி கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. தொழில்துறை தேவைகளைப்பூர்த்தி செய்யும்படி பாடத்திட்டத்தை வடிவமைத்து, வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்த, இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கல்லுாரி அறக்கட்டளை நிறுவனர், செயல் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்து, புது தொழில் நுட்பங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து முதல்வர் விசாகவேல், கல்லுாரி வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் ராஜேந்திரன் பேசினர்.
மேலும் சிறப்பு விருந்தினரான, கோனே எலிவேட்டர்ஸ் தகவல் தொடர்பு பிரிவு பொது மேலாளர் ஆறுமுகம், கே7 கம்ப்யூட்டிங் துணைத்
தலைவர் ராம்பிரசாத், எல் அண்ட் டி., கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்துறை வழிகாட்டி பாலசுப்பிரமணியன் பேசினர். கல்லுாரி அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.