/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோதண்டராமசுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
/
கோதண்டராமசுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலம்
ADDED : மே 13, 2025 02:34 AM
அயோத்தியாப்பட்டணம் :அயோத்தியாப்பட்டணத்தில், கோதண்ட ராமசுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது.
அயோத்தியாப்பட்டணத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து கடந்த 10ல் திருக்கல்யாண உற்சவம், புஷ்பக விமான புறப்பாடு, நேற்று முன்தினம் குதிரை வாகன புறப்பாடு உள்ளிட்ட உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு கோதண்ட ராமசுவாமி கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு, அரூர் நெடுஞ்சாலை வழியாக மேட்டுப்பட்டி, தாதனுார் வரை சென்று, மீண்டும் நேற்று மதியம், 2:00 மணிக்கு கோதண்ட ராமசுவாமி கோவில் வந்தடைந்து நிலை நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.