/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே நாளில் 6 சுகப்பிரசவம் சுகாதார நிலையத்துக்கு பாராட்டு
/
ஒரே நாளில் 6 சுகப்பிரசவம் சுகாதார நிலையத்துக்கு பாராட்டு
ஒரே நாளில் 6 சுகப்பிரசவம் சுகாதார நிலையத்துக்கு பாராட்டு
ஒரே நாளில் 6 சுகப்பிரசவம் சுகாதார நிலையத்துக்கு பாராட்டு
ADDED : மார் 17, 2024 02:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகராட்சியில், 16 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைங்கள் உள்ளன.
அவற்றில் சராசரியாக மாதம், 120 முதல், 140 சுகப்பிரசவங்கள் நடக்கின்றன. அதில் தாதகாப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 14ல் மட்டும், 6 பெண்களுக்கு சுகப்பிரசவம் நடந்தது. இதனால் மேயர் ராமச்சந்திரன் நேற்று, பிரசவித்த பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் வழங்கினார்.தொடர்ந்து, தமிழகத்தில் அதிக சுகப்பிரசவம் நடந்து வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து வரும் தாதகாப்பட்டி மருத்துவ குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். கமிஷனர் பாலச்சந்தர், மாநகர நல அலுவலர் யோகானந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.