/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அபாகஸ் தேர்வில் அசத்திய குழந்தைகளுக்கு பாராட்டு
/
அபாகஸ் தேர்வில் அசத்திய குழந்தைகளுக்கு பாராட்டு
ADDED : மே 04, 2024 06:58 AM
அயோத்தியாப்பட்டணம், : சேலம், அஸ்தம்பட்டியில், சர்வதேச அபாகஸ் போட்டி கடந்த மார்ச், 17ல் நடந்தது. அதில் அயோத்தியாப்பட்டணம் அருகே சி.தாதனுாரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் அசத்தினர்.
குறிப்பாக, 'சாம்பியன் ஆப் சாம்பியன்' ஆக, 19 பேர், சாம்பியனாக, 64 பேர், வின்னர், 12 பேர், ரன்னர், 5 பேர் என, 100 பேர் அசத்தினர். அவர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா, சின்னனுாரில் நேற்று நடந்தது. அதில் அபாகஸ் திறன் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு தெரிவித்து, பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இதில் வட்டார கல்வி அலுவலர் அந்தோணி முத்து, குளோபல் அகாடமி தலைவர் மெர்சி ஆஞ்சலா, பொருளாளர் ஜான் ஆரோக்கியராஜ், சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மேத்யூ, விரிவுரையாளர் மகாலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜய் சங்கர், பள்ளி மேலாண் குழு தலைவி மணிமேகலை, பயிற்சி அளித்த ஆசிரியர் பூர்ணிமா உள்பட பலர் பங்கேற்றனர்.