ADDED : நவ 21, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பாபிேஷகம் கோலாகலம்
சேலம், நவ. 21-
சேலம், மிட்டாபுதுாரில் உள்ள பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. மஹா பூர்ணாஹூதி செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள், வேதங்கள் முழங்க, கும்பம், கலசங்கள், கோவில் பிரகாரத்தில் சுற்றி வரப்பட்டு, பின் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், வேதங்கள் ஓத அர்ச்சனை நடந்தது. பின் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள், தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

