ADDED : ஜூன் 07, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், சக்தி மாரியம்மன் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் இரவு, வாஸ்து பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து துர்க்கை சன்னதியில் மருத்து சாற்றி கோபுர கலசம், துர்க்கை அம்மன் மற்றும் அருகில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, கோவிலில் நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம் செய்து, அதில் வைத்து பூஜை செய்த புனிதநீரை சிவாச்சாரியார்கள் எடுத்து வந்து, 9:45 மணிக்கு கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். துர்க்கைக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.