sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

/

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்


ADDED : ஏப் 19, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் மஹா கும்பாபி ேஷக பெருவிழா, நாளை காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள் நடக்க உள்ளது.

இதுகுறித்து, அக்கோவில் அறங்காவலர் குழு தலைவி வெங்கடேஸ்வரி, அவரது கணவர் சரவணன் கூறியதாவது:

கும்பாபிேஷக விழா, ஏப்., 18ல்(நேற்று) தொடங்கியது. காலை, 8:30 முதல் மதியம், 12:00 மணி வரை, குருமார்கள் அழைப்பு, யஷமானர்கள் சங்கல்பம், திருமாலிடம் அனுமதி பெறுதல், வேள்வி சாலையை புனிதப்படுத்தல், வேள்வி தொடங்குதல், வேள்வி நிறைவு நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை மேற்கொள்ளப்பட்டது.

மாலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை வேள்வி சாலையை புனிதப்படுத்தல், புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை இடுதல், நான்மறை, திவ்ய பிரபந்த தொடக்கம், யாக வேள்விக்கு நெருப்பை கடைந்து எடுத்தல், கலச பூஜை செய்தல், இளங்கோயிலில் உள்ள இறை சக்தியை கலசத்தில் இறக்குதல், கலசங்கள் அனைத்தும் வேள்வி சாலைக்குள் பிரவேசித்தல், 7 கலசங்கள் நீராட்டம் செய்தல், மீண்டும் வேள்வியை சிறப்பாக நிறைவு செய்து, நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை மேற்கொள்ளப்பட்டது.

ஏப்., 19(இன்று) காலை, 8:00 முதல் மதியம், 12:00 மணி வரை யாகசாலையை புனிதப்படுத்தல், கலசங்களுக்கு பூஜை செய்தல், வேள்வி துவங்குதல், அனுதின வேள்வி, அனைத்து தேவர்களின் சிறப்பு வேள்வி செய்தல், வேள்வி நிறைவு செய்தல், நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை அனைத்து தெய்வங்களுக்கும் அபிேஷகம் செய்தல், அபிேஷகத்துக்கு உண்டான வேள்வியை நிறைவு செய்தல், 9 கலச அபி ேஷகம் செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு, 7:00 முதல், 10:00 மணி வரை யாகசாலையை புனிதப் படுத்தல், கலச பூஜை, அனுதின வேள்வி செய்தல், திருமாலுக்கு தாலாட்டு செய்தல், சிறப்பு வேள்வி செய்தல், அனைத்து தேவர்களையும் வரவழைத்து சிறப்பான வழிபாடு செய்தல், வேள்வி நிறைவு செய்து நாலாயிர திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடக்கிறது.

விழாவின் முக்கிய நாளான, ஏப்., 20(நாளை) காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி சேவை, 8:00 முதல், 9:00 மணி வரை யாகசாலையை புனிதப்படுத்தல், அனுதின வேள்வி, சிறப்பு வேள்வி, குடமுழுக்குக்கான யாக வேள்வி நிறைவு செய்தல், நான்மறை நாலாயிரதிவ்ய பிரபந்த சாற்றுமுறை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, 9:30 முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபி ேஷக பெருவிழா நடக்க உள்ளது.

காலை, 10:45 மணிக்கு விஸ்வரூப தரிசனம், குருமார்கள் மரியாதை, நல்லாசிகள் வழங்குதல், தீர்த்த பிரசாதம் வழங்குதல், சான்றோர்களுக்கு மரியாதை செய்தல் நடக்கும். மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை அழகிரிநாதர் சுவாமியின் திருமண விழா, இரவு, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகிரிநாதர் திருவீதி உலா பவனி வருதல் நடக்க உள்ளது. இந்த விழாவில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர், அரசு துறை அதிகாரிகள் உள்பட பலரும் பங்கேற்க உள்ளனர். அதனால் பக்தர்கள் அனைவரும், விழாவுக்கு வந்து சிறப்பித்து பெருமாள் அருளை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் சுந்தரவல்லி உடனுறை அழகிரிநாதர் சுவாமி திருவருள் பெற்று, எல்லா வளமும் பெற அன்புடன் அழைப்பதாக, செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர்கள் சுந்தரகோபால், சுரேஷ்பாபு, அறிவழகன், குணசேகரன், கோவில் பணியாளர்கள், உபயதாரர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாகசாலை பூஜையுடன் தொடக்கம்

சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷக விழாவின் முதல் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு குருமார்கள் அழைப்பு, திருமாலிடம் அனுமதி பெறுதல், யாக சாலையை புனிதப்படுத்தல் உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு புற்றுமண் எடுத்து வரப்பட்டு, யாகசாலையில் முளைப்பாலிகை இடப்பட்டது. பட்டாச்சாரியார்கள் அத்தி மரக்கட்டையை கடைந்து, இயற்கை முறையில் யாகசாலைக்கு தேவையான தீயை உண்டாக்கினர். பின் புனிதநீர் கலசங்களை ஸ்தாபிதம் செய்து, முதல்நாள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

இன்று காலை முதல் இரவு வரை, 3 கால யாக பூஜைகள், சுதர்சன், ஸ்ரீராமன், கவுதம் உள்ளிட்ட பட்டாச்சாரியார்களால் சிறப்பாக நடக்கிறது. நாளை, திருப்பள்ளியெழுச்சியுடன் தொடங்கி, 4 கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us