ADDED : மார் 05, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த கார்த்திகை, மார்கழி, தையில் பனியால், விளைச்சல் பாதிக்கப்பட்டு பூக்கள் வரத்து குறைந்திருந்தது. அதற்கேற்ப விலை அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக குண்டுமல்லி கிலோ, 3,000 ரூபாய் வரை விற்றது. தற்போது பூக்கள் விளைச்சல் அதிகரித்து, அதற்கேற்ப வரத்து உள்ளது. இதனால் சில நாட்களாக கிலோ, 600க்கு விற்ற குண்டுமல்லி, நேற்று முன்தினம், 400, நேற்று, 300 ஆக குறைந்தது. ஜாதிமல்லி, 300க்கு விற்பனையானது. காக்கட்டான், கலர் காக்கட்டான் தலா, 60, நந்தியாவட்டம், 200, சம்பங்கி, 100, அரளி, வெள்ளை அரளி தலா, 40, மஞ்சள் அரளி, 150 ரூபாய்க்கு விற்பனையானது.