/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
/
தொழிலாளி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : மார் 14, 2024 07:05 AM
சேலம் : திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த, கட்டட தொழிலாளி தியாகு, 31.
இவரை கடந்த ஜன., 3ல் சூரமங்கலத்தில் உள்ள அவரது வாடகை வீட்டில் மதுவில் விஷம் கலந்து கொடுத்தும் கழுத்தை நெரித்தும், 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் போலீசார், ஆலத்துடையான்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 27, சுரேஷ், 33, விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி வரலட்சுமி, 26, ஆகியோரை கைது செய்தனர்.மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தும்படி கொலை செய்ததால், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சூரமங்கலம் போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறை, பெண்கள் கிளை சிறையில் உள்ள, 3 பேரும், ஓராண்டுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.

