ADDED : செப் 21, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, ஹை ஸ்கூல் மேட்டை சேர்ந்த ரவுடி நவீன்-குமார், 29. இவர் கடந்த ஆக., 14ல், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் வீட்டில் அத்துமீறி நுழைந்து கர்ப்பினி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது ஆட்டை-யாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், அடிதடி, கொலை முயற்சி, போலீசாரை பணிபுரிய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட
வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, ஆட்டையாம்பட்டி போலீசார் பரிந்துரைத்தனர்.
அதை ஏற்று கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, நேற்று உத்தரவிட்டார்.