/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் கண்ணாடி உடைப்பு கூலி தொழிலாளி கைது
/
பஸ் கண்ணாடி உடைப்பு கூலி தொழிலாளி கைது
ADDED : ஜன 04, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஜன. 4-
வாழப்பாடியில் இருந்து ஆத்துாருக்கு, அரசு டவுன் பஸ்(தடம் எண்: 15பி), நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, 50 பயணியருடன் சென்று கொண்டிருந்தது. கொத்தாம்பாடி அருகே சென்றபோது, மர்ம நபர், பஸ் மீது கல்லை வீசி தப்பினார்.
இதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பஸ் டிரைவர் பெரியசாமி புகார்படி ஆத்துார் ஊரக போலீசார் விசாரணையில், கல்பகனுாரை சேர்ந்த, கூலித்தொழிலாளி மோகன், 27, கல் வீசியது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.

