ADDED : டிச 20, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயோத்தியாப்பட்டணம், டிச. 20-
அயோத்தியாப்பட்டணம் அடுத்த, பெரிய
கவுண்டாபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல், 55. இவர் மின்னாம்பள்ளியில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை, 4:10 மணிக்கு மின்னாம்பள்ளி பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை, டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில் கடக்க முயன்றார். அப்போது, சேலத்தில் இருந்து வாழப்பாடி நோக்கி அண்ணாதுரை, 55, என்பவர் ஓட்டி வந்த மகேந்திரா ஸ்கார்பியோ கார், தங்கவேல் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தங்கவேல் உடலை காரிப்பட்டி போலீசார் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அண்ணாதுரையிடம் விசாரித்து வருகின்றனர்.