/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி பலி
/
பைக்கில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி பலி
ADDED : மே 21, 2025 01:41 AM
கெங்கவல்லி, பைக்கில் அமர்ந்து சென்ற கூலித் தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார்.
தலைவாசல் அருகே, நாவலுார் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், 37. கூலித் தொழிலாளியான இவர் கடந்த, 18ல், நண்பர் முரளியுடன் ஆத்துாருக்கு, பைக்கில் சென்றுவிட்டு, அதே பைக்கில் சின்னபுனல்வாசல் வழியாக வந்தனர். பைக்கை முரளி ஓட்டி வந்தார்.
அப்போது, சின்னபுனல்வாசல் சாலை வளைவில் பைக் திரும்பியபோது, பின்னால் அமர்ந்திருந்த, குமரவேல் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்தார்.
கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
இறந்த குமரவேலுக்கு, மனைவி மணிமேகலை, 32, ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது, ஏழு மாத கர்ப்பிணியாக, மனைவி மணிமேகலை இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.