/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி
/
கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி பலி
ADDED : நவ 27, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் தவறி விழுந்த
கூலித்தொழிலாளி பலி
வாழப்பாடி, நவ. 27-
வாழப்பாடி, கல்கொத்தி தெருவை சேர்ந்த, சிவலிங்கம் மகன் சூரியா, 18. நேற்று வெள்ளாளகுண்டத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு கம்பி வேலி அமைக்கும் கூலி வேலைக்கு சென்றார். மதியம், 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள, 130 அடி ஆழ கிணற்றில், சூரியா தவறி விழுந்தார். 5 நிமிடத்தில் தகவல் கிடைக்க, வாழப்பாடி போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். தொடர்ந்து வீரர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தபோது, சூரியா இறந்து கிடந்தார். உடலை மீட்டு, வாழப்பாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.