ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேச்சேரி : மேச்சேரி, தெத்திகிரிப்பட்டியை சேர்ந்த, கூலித்தொழிலாளி முத்துசாமி, 59.
நேற்று இரவு, 8:00 மணிக்கு, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் மேச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது மேட்டூரில் இருந்து ரசாயன திரவம் ஏற்றிக்கொண்டு தொப்பூர் நோக்கி சென்ற டேங்கர் லாரி, பைக் பின்புறம் மோதியது. அதில் முத்துசாமி படுகாயம் அடைந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.