/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாமியார் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

ADDED : அக் 29, 2025 01:40 AM
சேலம் :மாமியார், மனைவியின் அக்காக்களை கத்தியால் குத்திய வழக்கில், கூலித்தொழிலாளிக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம், மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ஞானஅரசன், 33. கூலித்தொழிலாளியான இவருக்கும், தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷினி, 28, என்பவருக்கும், 2022ல் திருமணம் நடந்தது. 2023ல் குழந்தை பிறந்தது. சந்தோஷினி, பச்சிளங்குழந்தையுடன் தாசநாயக்கன்பட்டியில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். அங்கு, 2023 மே, 23ல் ஞான அரசன் வந்து சந்தோஷினியையும், குழந்தையையும் அனுப்பி வைக்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.
அதில் வாக்குவாதம் முற்றி, மாமியார் அம்மணி, 65, மனைவியின் சகோதரிகளான ஜோதி, 35, பிரமோ, 33, ஆகியோரை, கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். படுகாயம் அடைந்த, 3 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து ஞான அரசனை கைது செய்தனர்.இந்த வழக்கு, சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ஞான அரசனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 900 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.