/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
/
பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
பீர் பாட்டிலால் நண்பரை தாக்கிய கூலித்தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : ஆக 20, 2025 01:31 AM
மேட்டூர், ஓமலுார், துட்டம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பெருமாள், 24, சீனிவாசன், 24, முருகன், 43. இவர்கள் கடந்த, 17 மதியம், 3:30 மணிக்கு, மேட்டூர் வந்து அணை முனியப்பன் கோவில் அருகே மது அருந்தினர். அப்போது சீனிவாசன், 'என்னிடம் வாங்கிய கடன், 1,500 ரூபாயை எப்போது தருவாய்' என, பெருமாளிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பெருமாள், 'அத்தொகையை ஏற்கனவே கொடுத்துவிட்டேன்' என கூறியுள்ளார். இதுதொடர்பாக நண்பர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது சீனிவாசன், பீர்பாட்டிலை உடைத்து பெருமாளின் தலை, காது பகுதியில் குத்தியுள்ளார். அதேநேரம் முருகனும், கல்லை எடுத்து பெருமாள் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளார். சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் திரண்டு வர, 3 பேரும் கலைந்து சென்றுவிட்டனர்.
காயம் அடைந்த பெருமாள், நேற்று முன்தினம் மதியம், ஓமலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, மேட்டூர் போலீசார், நேற்று
சீனிவாசனை கைது செய்து,
முருகனை தேடுகின்றனர்.