/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூட்டுறவு சங்கத்தில் 'லாக்கர்' வசதி இல்லை நகை அடமான கடன் வழங்குவதில் சிக்கல்

ADDED : ஜூலை 28, 2025 03:55 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் கம்மாளப்பட்டி, தும்பல்பட்டி, குரால்நத்தம் ஆகிய ஊராட்சிகளில், மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் பயன்பெற, இரு ஆண்டுக்கு முன், மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. அச்சங்கத்துக்கு தனி அலுவலக கட்டடம் இல்லை. இதனால் தும்பல்பட்டி ஊராட்சி
யின், பழைய அலுவலகத்தில் செயல்படுகிறது. அதில், 1,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக
சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து உறுப்பினர்கள் கூறியதாவது: கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழக்கப்படுகிறது. அங்கு போதிய இட வசதி
யின்றி, ஊராட்சியின் பழைய அலுவலகத்தில் செயல்படுகிறது. அங்கு, 'லாக்கர்' இல்லாததால், அடமானம் பெறப்படும் நகைகளை பாதுகாப்பாக வைக்க இயலாது. அதனால், நடை அடமான கடன் வழங்கவில்லை. குரங்குபுளியமரம் பஸ் ஸ்டாப் அருகே கூட்டுறவு சங்கத்துக்கு தனி கட்டடம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.