ADDED : பிப் 10, 2025 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி, வீரபாண்டி, கொப்பம் ஏரிகளில் ஓராண்டு மீன்பிடி உரிம குத்தகை ஏலம் வரும், 12ல், அரியானுாரில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில் குறைந்தபட்ச ஏலத்தொகையாக, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரிக்கு, 15,45,500 ரூபாய், கொப்பம் ஏரிக்கு, 11,01,100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் வரும், 12 காலை, 10:00 முதல், 11:00 மணிக்குள், ஒரு ஏரிக்கு, 25,000 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி, ஏலத்தில் பங்கேற்கலாம் என, வீரபாண்டி ஒன்றிய கமிஷனர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

