/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லட்சுமி நாராயணர், பாண்டுரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
லட்சுமி நாராயணர், பாண்டுரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
லட்சுமி நாராயணர், பாண்டுரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
லட்சுமி நாராயணர், பாண்டுரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
சேலம்: சேலத்தில், லட்சுமி நாராயணர், பாண்டுரங்கநாதர் கோவில் கும்-பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சேலம், 2வது அக்ரஹாரத்தில் உள்ள லட்சுமி நாராயணர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 10ல், முதல் கால யாக வேள்வி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 2ம் கால வேள்வி யாக பூஜை நடந்தது. நேற்று காலை யாக சாலையில் புனித தீர்த்த கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள், வேத மந்திரம் முழங்க கலச தீர்த்தத்தை, கோவில் வளாகத்தை சுற்றி கோபுர கலசத்துக்கு கொண்டு சென்-றனர்.சுதர்சன பட்டாச்சாரியார், ஸ்ரீராம் பட்டாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்துக்கு தீர்த்த அபி ேஷகம் நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என, கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்-பாடுகளை கோவில் செயல் அலுவலர் அனிதா, தக்கார் பரமேஸ்-வரன், ஆன்மிக அன்பர் குழுவினர் செய்திருந்தனர்.அதேபோல் சேலம், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் நேற்று பட்டாச்சாரியார்கள், கலச தீர்த்தத்தை கோவில் வளாகத்தை சுற்றி வந்த பின், கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபி-ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனைகள் நடந்தன. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

