ADDED : செப் 18, 2026 01:36 AM
ஏற்காடு: ஏற்காடில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கனமழை பெய்யத்தொடங்கி இரவு முழுதும் கொட்டியது. இதில் மலைப்-பாதையின், 13, 14வது கொண்டை ஊசி வளைவுகள் இடையே, இரவு, 11:30 மணிக்கு, சாலையோரம் லேசான நிலச்சரிவு ஏற்பட்-டது. இதில் சிறு மரம், மண் சாலை குறுக்கே விழுந்தது. இதை அறிந்து, ஏற்காடு நெடுஞ்சாலை துறையினர், அங்கு சென்று, மரம், கற்கள், மண்ணை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு, மலைப்பாதை, 40 அடி பாலம் அருகே, 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை, அதனுடன் சிறு பாறைகளும் சரிந்து, சாலை குறுக்கே விழுந்தன. அந்த நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாததால் அசம்பா-விதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், பொக்லைன் உத-வியுடன், பாறையை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பாறை பெரிதாக இருந்ததால், சிறிது சிறிதாக நகர்த்தி, 4 மணி நேரத்துக்கு பின், பாறையை சாலையோர வனப்பகுதியில் தள்ளி அப்புறப்படுத்தினர். இப்பணியால், மலைப்பாதையில் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.
திடீர் அருவிகள்
மேலும் ஏற்காடில் நேற்று முன்தினம் இரவு முழுதும் மழை பெய்ததால் ஆங்காங்கே திடீர் அருவிகள் தோன்றின. இதனால் ஏற்காடு வந்த சுற்றுலா பயணியர், அந்த அருவிகளை பார்த்து ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
