sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு

/

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு


ADDED : அக் 14, 2025 07:34 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காடு மலைப்பாதையில் நேற்று அதிகாலை மண்சரிவு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் உள்ள, 60 அடி பாலம் அருகே உள்ள மலைப்பாதை ஓரத்தில், 15 அடி உயரத்தில் இருந்த சிறிய பாறை ஒன்று சரிந்து விழுந்து, சிறிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டது. பாறை சரிந்து, அதிலி-ருந்த இரண்டு சிலவஞ்சி மரங்கள் வேருடன் சாலையின் குறுக்கே விழுந்தது.இதனால் நேற்று காலை மலைப்பாதையில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது வந்த வாகன ஓட்-டிகள் சிலர், சாலையில் விழுந்த சிறிய அளவிலான மரக்கிளை-களை உடைத்து, வாகனங்கள் தற்காலிகமாக சென்று வர வழி செய்தனர். மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து, நெடுஞ்-சாலை துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், சாலையின் குறுக்கே விழுந்த மரங்-களை அப்புறப்படுத்தினர். பிறகு மலைப்பாதையில் போக்குவரத்து முழுவதுமாக சரி செய்யப்பட்டது. பின்னர், சாலையோ-ரத்தில் விழுந்த பாறையை அப்புறப்படுத்தினர். மேலும் பாறை விழுந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில், மேலும் ஒரு பாறை ஆபத்தான நிலையில் சரிவது போல் இருப்பதால், மலைப்பா-தையில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us