/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சட்ட ஆலோசகர் வீட்டில் லேப்டாப், பைக் திருட்டு
/
சட்ட ஆலோசகர் வீட்டில் லேப்டாப், பைக் திருட்டு
ADDED : மே 04, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி, ஜி.கே.கரட்டூரை சேர்ந்தவர் நேதாஜி, 39. தனியார் காப்பீடு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக உள்ளார். கடந்த, 1 இரவு வீட்டு கதவு, ஜன்னலை திறந்துவைத்துவிட்டு துாங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், உயர்ரக மொபைல் போன், ைஹடெக் லேப்டாப், வராண்டாவில் நிறுத்தியிருந்த, 'பல்சர்' பைக் ஆகியவற்றை திருடிச்சென்றார். மறுநாள் காலை, திருடுபோனது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.45 லட்சம் ரூபாய். இதுகுறித்து அவர் புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார், சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.