/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூச்சி மருந்து கடையில் மடிக்கணினி திருட்டு
/
பூச்சி மருந்து கடையில் மடிக்கணினி திருட்டு
ADDED : ஜன 04, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஜன. 4-
ஆத்துார் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 54. ஆத்துார் அரசு மருத்துவமனை எதிரே பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிச்சென்றார்.
நேற்று காலை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது மடிக்கணினி திருடுபோனது தெரிந்தது. அருகே உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, ஒருவர் கடை பூட்டை உடைத்து பொருட்களை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. வேல்
முருகன் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

