/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்
/
வக்கீல்கள் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 20, 2025 07:19 AM
சேலம்: சென்னை உயர்நீதிமன்றத்தில், 2009 பிப்., 19ல் வக்கீல்கள், நீதி-மன்ற ஊழியர்களை, போலீசார் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதை கண்டித்து, வக்கீல்கள் சார்பில் கருப்பு தினம் கடை-பிடிக்கப்படுகிறது. அதையொட்டி சேலம் வக்கீல் சங்கம் சார்பில், 4,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள், நேற்று, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்கள் கவின், தண்-டபாணி, நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் ராஜேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இன்றும் பணி புறக்க-ணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் வக்கீல்கள் சட்டத்தில் மத்-திய அரசு கொண்டு வர உள்ள மாற்றங்களை திரும்ப பெறக்-கோரி, நாளையும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேட்டூர்
மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், மேட்டூர் வக்-கீல்கள் பணியை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேட்டூர் அணை வக்கீல் சங்க தலைவர் செந்தில், செயலர் மனோகர், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
வக்கீல்கள் சேமநல நிதியை, 10 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தல்; மத்திய, மாநில அரசுகள் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி கோஷம் எழுப்பினர். சங்க-கிரி வக்கீல் சங்கம் சார்பில், சங்ககிரி, இடைப்பாடியில் உள்ள நீதிமன்ற பணிகளை, வக்கீல்கள் புறக்கணித்தனர்.