/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
/
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 22, 2025 01:24 AM
குமாரபாளையம், குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உள்ளகப் புகார் குழு மற்றும் குமார பாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து, சட்ட விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்து பேசினார். பேராசிரியர் முரளிதரன் வரவேற்றார். வக்கீல் பிரகாஷ், மாணவர்களுக்கு சட்டங்கள் குறித்து பயனுள்ள கருத்துகளை தெரிவித்தார். மாணவ, மாணவியரிடம் கேள்வி கேட்கப்பட்டு, சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
சட்டங்களை பின்பற்றி நடப்போம் என்று மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் விடியல் பிரகாஷ், தன்னார்வலர் வேல்முருகன், புகார் குழு உறுப்பினர் பேராசிரியை தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.