ADDED : நவ 09, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.டி.ஐ.,யில் சட்ட விழிப்புணர்வு
சேலம், நவ. 9-
சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், மாவட்ட சட்ட உதவி மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஐ.டி.ஐ., துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட சட்ட உதவி மைய உறுப்பினர் ராஜா, ராகிங், பொதுச்சட்டம், நீதிமன்றங்களில் வழங்கும் சட்ட உதவிகள், குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி தொடர்பான சட்டங்கள், இள வயது திருமணம, பாலியல் துன்புறுத்தல், இளஞ்சிறார் குற்றத்தடுப்பு, ஆலோசனை குறித்து எடுத்துரைத்தார். மாணவ, மாணவியர் பயன்பெற்றனர்.