தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எலுமிச்சை பழ மூட்டை: ரூ.500 விலை உயர்வு

எலுமிச்சை பழ மூட்டை: ரூ.500 விலை உயர்வு

எலுமிச்சை பழ மூட்டை: ரூ.500 விலை உயர்வு


ADDED : பிப் 20, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் இருக்கும். நடப்பாண்டில், இந்த மாதத்தில் இருந்தே வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. சூட்டை தணிக்க, மக்கள் அதிக-ளவில் எலுமிச்சை பழங்களை வாங்குகின்றனர். வழக்கமாக இந்த பழம், டிசம்பர், ஜனவரியில் தான் விளைச்சல் அதிகம் இருக்கும். தற்போது வரத்து குறைவாக உள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, சேலம் வ.உ.சி., மார்க்கெட் எலுமிச்சை வியாபாரி கதிர்வேல் கூறியதாவது:

திருச்சி, திண்டுக்கல் மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் பனமரத்-துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இருந்து, சேலம் கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை, உழவர் சந்தைகளுக்கு, நாட்டு எலுமிச்சம் பழம் கொண்டு வரப்படுகிறது. இதில், 80 சத-வீதம் வரை வரத்து குறைந்துவிட்டது. ஆனால் ஆந்திராவில் இருந்து வரத்து அதிகம் உள்ளது. இருப்பினும் வெயில் தாக்-கத்தால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. அதன்படி முதல் ரக எலுமிச்சை பழம் மூட்டை(800 பழம்) கடந்த வாரம், 2,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, 2,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. 2ம் ரகம், 1,200 இருந்து, 1,600 ரூபாய், மூன்றாம் ரகம், 1,500ல் இருந்து, 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு பழம், 1.50க்கு விற்றது, 2 ரூபாயாகவும், 2க்கு விற்றது, 3 ரூபாயாகவும், 3க்கு விற்றது, 4 முதல், 5 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us