/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
/
பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
ADDED : செப் 29, 2024 01:01 AM
பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்?
கேமரா பொருத்தி வனத்துறை கண்காணிப்பு
ஆத்துார், செப். 29-
பச்சமலையில், 4 கன்றுக்குட்டி, ஒரு பசு மாடு இறந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியானதால் நவீன கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.
கெங்கவல்லி அருகே பச்சமலை ஊராட்சி கீழ்பாலத்தாங்கரை மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து, 40. விவசாயம், ஆடு, மாடுகளை வளர்க்கிறார். கடந்த, 25ல், இவரது பட்டியில் இருந்த இரு கன்றுக்குட்டிகளை, மர்ம விலங்கு வனப்பகுதிக்கு இழுத்துச்சென்றது.
நேற்று முன்தினம் அதே பட்டியில் புகுந்து, இரு கன்றுக்குட்டிகளின் கழுத்தை கடித்து ரத்தம் உறிஞ்சி துாக்கிச்சென்றது. மற்றொரு பசு மாட்டை தாக்கியதில் இறந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள், இரவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பார்த்துள்ளனர்.
இதனால் வனக்குழு தலைவர் பொன்னுசாமி நேற்று, ஆத்துார் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்யராஜ் சேவியருக்கு தகவல் கொடுத்தார். அவரது உத்தரவுப்படி, கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர், தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். காலடி தடங்கள் குறித்து பார்வையிட்டனர். ஆனால் மழையால் பதிவாகவில்லை.
அதேநேரம் பட்டியில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது, வனப்பகுதியில் எலும்பு கூடான நிலையில் இறந்த கன்றுக்குட்டி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து பட்டி அருகே இரு இடங்களில் நவீன கேமராக்களை வைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கீழ்பாலத்தாங்கரை உள்ளிட்ட பகுதி மக்கள், இரவில் வெளியே வரவேண்டாம் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். தற்போது மேட்டூரில் சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டை, இங்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர்.