/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்தூர் அருகே பச்சமலையில் சிறுத்தை நடமாட்டம்: 5 நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

ADDED : செப் 29, 2024 08:52 PM

ஆத்தூர்:ஆத்தூர் அருகே பச்சமலை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மேலும் 5 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவுக்கு உட்பட்ட பச்சமலை ஊராட்சி, கீழ்பாலத்தாங்கரை பகுதியில், நான்கு கன்றுக்குட்டிகளை சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது. அதில் ஒரு கன்றுக்குட்டி இறந்துவிட்டது.
சிறுத்தையை, அப்பகுதியினர் பார்த்ததாக கூறியதால், ஆத்தூர் வனக்கோட்ட அலுவலர் ஆரோக்யராஜ் சேவியர் தலைமையில் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர், தற்போது, மேலும் ஐந்து நவீன கேமரா என மொத்தம் ஏழு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை செய்து, இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.