/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வாசிப்பை நேசிப்போம்' உலக புத்தக தின விழா
/
'வாசிப்பை நேசிப்போம்' உலக புத்தக தின விழா
ADDED : ஏப் 25, 2025 01:39 AM
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட விளையாட்டரங்கில், உலக புத்தக தின விழாவையொட்டி, புத்தக வடிவில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற, 'வாசிப்பை நேசிப்போம்' நிகழ்ச்சி நடந்தது- இதில், மாவட்ட கலெக்டர் சதீஸ் பேசியதாவது:
உலக புத்தக தின விழாவையொட்டி, அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், புத்தகம் வாசிப்பு பழக்கத்தை, அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் உன்னதமான நோக்கம்.
புத்தக வாசிப்பின் பயன் புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் அறிவாற்றல் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். நம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூகத்தை பற்றியும் சிந்தித்து செயலாற்றுவதற்கு, புத்தக வாசிப்பு பெரும் பயனளிக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, தர்மபுரி நான்கு ரோட்டில் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நீர், மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கினார்.
இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, தர்மபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் செந்தில், மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

