/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடிதம் எழுதும் போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்
/
கடிதம் எழுதும் போட்டி மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : பிப் 20, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தபால் துறை சார்பில் சர்வதேச கடித போட்டி நேற்று நடந்தது. சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலகம் சார்பில், மாவட்-டத்தில், 10 மையங்களில் நடந்த போட்டியில், 9 முதல், 15 வய-துக்குட்பட்ட, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்-றனர்.
'நீங்கள் உங்களை கடல் என கற்பனை செய்து கொண்டு, உங்-களை ஏன், எப்படி கவனித்து கொள்ள வேண்டும்' என்பதை விளக்கும்படி கடிதம் எழுதினர். இதில் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று பேருக்கு முறையே, 25,000, 10,000, 3,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
மேலும் அகில இந்திய அளவில் 50,000, 25,000, 10,000 ரூபாய் முறையே பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

