/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து'
/
'கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து'
ADDED : பிப் 14, 2025 07:25 AM
சேலம்: சேலம் தர கட்டுப்பாடு வேளாண் உதவி இயக்குனர் கவுதம் அறிக்கை: சேலம் மாவட்டத்தில், மொத்த உர விற்பனையாளர் - 113, சில்லரை விற்பனையாளர் - 701, கலப்பு உரம் உற்பத்தியாளர் - 17 பேர், உர விற்பனை உரிமம் பெற்று வியாபாரம் செய்கின்றனர்.
தற்போது தனியார் உர விற்பனை மையங்களில், 6,769 டன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், 3,027 டன், மத்திய உர கிடங்குகளில், 7,022 டன் உரங்கள் இருப்பு வைத்து வினியோகம் நடக்கிறது. மத்திய அரசு நிர்ணயித்த விலையை விட, தனியார் நிலையங்களில், கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் வந்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பது, ஆய்வில் கண்டறியப்பட்டால், உர உரிமம் ரத்து செய்வதோடு, அந்நிறுவனம் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் உரம் தொடர்பான புகாரை, மாநில அளவில், 93634-40360 என்ற வாட்ஸாப் எண்ணுக்கும், மாவட்ட அளவில், 0427 -2451050, 94433 - 83304 என்ற எண்களிலும் விவசாயிகள் தெரிவிக்கலாம்.