ADDED : ஜூலை 17, 2025 02:21 AM
சேலம், சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி என, 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் என, 4 பகுதிநேர அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த ஜூனில், 11 அலுவலக பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுவினர், 1,419 வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் சாலை விதிகளை மீறியவர்களின், 48 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
மேலும், முகப்பு விளக்கை அதிக வெளிச்சத்துடன் ஒளிரவிட்டது, அதிக சத்தம் எழுப்பிய ஏர்ஹாரன் போன்று, பல்வேறு விதிமீறல்கள் கண்டறிந்து மொத்தம், 43.16 லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அதில் உடனடியாக, 27 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது. அவற்றில் அதிகபட்சமாக ெஹல்மெட் அணியாமல் சென்ற, 319 பேர், அதி வேகத்தில் சென்ற, 133 பேர், சீட்பெல்ட் அணியாதவர்கள், 115 பேர், அதிகபாரம் ஏற்றியது, 63 பேர் அடங்கும். தவிர, 22 லட்ச ரூபாய் சாலை வரியும் வசூலானது. அத்துடன் தகுதிச்சான்று (எப்.சி.,), அனுமதிசீட்டு (பர்மிட்) இல்லாத 203 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டது என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.