/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பனமரத்துப்பட்டி சாலையில் விளக்கு அவசியம்
/
பனமரத்துப்பட்டி சாலையில் விளக்கு அவசியம்
ADDED : ஜூலை 03, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் இருந்து பனமரத்துப்பட்டிக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. அதில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியின் கடைசி எல்லையில் தெரு விளக்குகள் இல்லை.சாலை இருபுறமும் விவசாய நிலம் உள்ள
நிலையில், அங்கு சாலை வளைவில், இருளில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.தெருவிளக்குகள் அமைக்க, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

