/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மது' பிரியர் பிடியில் குப்பை கூடாரம்
/
'மது' பிரியர் பிடியில் குப்பை கூடாரம்
ADDED : ஆக 20, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் மயானம் செல்லும் வழியில், மட்கும், மட்காத குப்பை தரம் பிரிக்கும் கூடம் உள்ளது. அது தற்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. அங்கே மது விற்பனையும் நடக்கிறது. எந்த நேரமும், 'குடி'மகன்களின் கூட்டம் காணப்படுவதால், அந்த வழியே செல்லவே பலரும் அச்சப்படுகின்றனர்.
'போதை'யில் மக்களை வழிமறித்து, பணம் கேட்கின்றனர். அரசு நிதியில் கட்டிய குப்பை கூடம், 'குடி'மகன்களின் பிடியில் சிக்கியதால், மக்கள் கலக்கத்துடன் செல்கின்றனர். இதுகுறித்து சுதந்திர தின கிராம சபா கூட்டத்திலும் மக்கள் புகார் தெரிவித்தனர்.