/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையில் குப்பை: எச்சரித்தும் அலட்சியம்
/
சாலையில் குப்பை: எச்சரித்தும் அலட்சியம்
ADDED : நவ 04, 2024 05:19 AM
வீரபாண்டி: சேலம், இரும்பாலை, 3ம் நுழைவாயில் எதிரே, சாலையோர காலி இடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பை கொண்டு வந்து கொட்டி எரித்தனர். இதை தடுக்க மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி சார்பில், 'இங்கு குப்பை கொட்டவோ, எரிக்கவோ கூடாது. கேமரா வைத்து கண்காணிக்கப்படுகிறது. மீறுவோர் மீது போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவிப்பு செய்து பலகை வைத்தனர்.
ஆனால் அதை கண்டுகொள்ளாமல், தற்போதும் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, அங்கு குவிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள இறைச்சி கழிவு மழைநீரில் அழுகி மட்கி துர்நாற்றம் அடிப்பதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவில் தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் அங்கு குப்பை கொட்டுவோர் மீது, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.