/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.50 லட்சம் கடன்; எலக்ட்ரீஷியன் ஓட்டம்
/
ரூ.1.50 லட்சம் கடன்; எலக்ட்ரீஷியன் ஓட்டம்
ADDED : மார் 07, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம், அழகாபுரம் பெரியபுதுாரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் விஜயகுமார், 44.
இவரது மனைவி சந்திரா, 33. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், 'டெஸ்ட்யூப் பேபி' மூலம் சந்திரா குழந்தை பெற்றுக்கொண்டார். மனைவியின் பிரசவ செலவை கூறி, பலரிடம், 1.50 லட்சம் ரூபாயை, விஜயகுமார் கடனாக பெற்றார். அதை கேட்டு கடன்தாரர்கள், தொந்தரவு செய்த நிலையில் கடந்த ஜன., 22ல் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள், சந்திராவிடம் கேட்டுள்ளனர். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

