/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாராபுரத்தில் மதுக்கடை ஊர் மக்கள் எதிர்ப்பு
/
தாராபுரத்தில் மதுக்கடை ஊர் மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 26, 2025 01:14 AM
சேலம், சேலம் காமலாபுரம் அருகே, தாராபுரத்தை சேர்ந்த மக்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
காமலாபுரம் பிரிவு ரோட்டில், ஏற்கனவே மூன்று டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்நிலையில், தாராபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது. அதன் அருகே ஆஞ்சநேயர் கோவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பெண்கள் பள்ளி அமைந்துள்ளன. டாஸ்மாக் மதுக்கடை திறந்தால் அவ்வழியாக செல்லக்கூடிய மாணவ, மாணவியர், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். அதனால், பிரச்னைகள் தலைதுாக்கி சட்டம் -ஒழுங்கு பாதிக்கக்கூடும். அத்துடன் போக்குவரத்துக்கும் இடையூறு உண்டாகி, அமைதியின்மை நிலை உருவாகும். அதையும் மீறி, மதுக்கடையை திறந்தால் மக்களை திரட்டி, போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.