ADDED : ஜூன் 30, 2025 03:31 AM
சேலம்: சேலம் மாவட்டம், சிங்கிபுரம் துணைமின் நிலைய வளா-கத்தில், வாழப்பாடி மின் கோட்ட அலுவலகம் இயங்கி வருகி-றது.
அதனுடைய கழிப்பறை பராமரிப்பின்றி, அடைப்பு ஏற்-பட்டு, தேங்கி நிற்கும் மலம் கலந்த கழிவுநீரால், பயன்பாடின்றி கடந்த 6 மாதமாக கழிப்பறை பூட்டி கிடக்கிறது. தற்போது கடும் துர்நாற்றம் வீசுவதால், கழிப்பறை பக்கம் நடமாட முடியாத அவலம் நீடிக்கிறது. அதனால், கோட்ட மின் அலுவலர்கள், ஊழி-யர்கள் அவசரத்துக்கு ஒதுங்கவும், இயற்கை உபாதை கழிக்க இடம்தேடி பரிதவிக்கின்றனர்.அதேபோல கோட்ட அலுவலகத்துக்கு உட்பட்ட, 13 மின்பிரிவு அலுவலர்கள் வரும் பட்சத்தில், அவர்களும் சிரமத்துக்கு ஆளா-கின்றனர். வேறு வழியின்றி, துணை மின்நிலையம் சார்ந்த மறை-விட பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கழிப்ப-றையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.