/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'துணை' இறப்பால் 'தனிமை' பெண் மலைப்பாம்பும் சாவு
/
'துணை' இறப்பால் 'தனிமை' பெண் மலைப்பாம்பும் சாவு
ADDED : நவ 30, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை பூங்காவில், சிறுவர் விளையாட்டு திடல் அருகே ஒரு பண்ணையில் ஜோடி மலைப்பாம்புகள் இருந்தன. அதில், 20 வயது நிரம்பிய ஆண் மலைப்பாம்பு உடல்நலம் பாதிக்கப்-பட்ட நிலையில், கடந்த, 11ல் உயிரிழந்தது.
அதே வயதுடைய பெண் மலைப்பாம்பு, தனிமையில் இருந்த நிலையில் நேற்று காலை இறந்தது. பூங்காவில் பாம்பு புதைக்கப்பட்டது. 20 ஆண்-டுகள் ஆண் பாம்புடன் இருந்த பெண் பாம்பு, 'துணை' இறந்த, 19 நாட்களில் இறந்தது, நீர்வளத்துறை ஊழியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

