ADDED : டிச 15, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், முல்லைவாடி அரசு தோட்டக்கலைப்பண்ணையில், நாட்டு ரகம் நெட்டை ரகத்தில், 23,500 தென்னங்கன்றுகள் உள்-ளன.
இவை, தேங்காய், கொப்பரை பயன்பாட்டுக்கு உகந்தது. 5 ஆண்டுகளில் தேங்காய் காய்ப்பு இருக்கும். ஆண்டுக்கு மரத்துக்கு தலா, 100 முதல், 150 காய்கள் வரை அறுவடை செய்யலாம். வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த நெட்டை ரக கன்று, தலா, 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என, தோட்டக் கலை அலுவலர் இலக்கியா தெரிவித்துள்ளார்.