/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொள்ளையடித்ததே தி.மு.க., அரசின் சாதனை: பொங்கல் விழாவில் 'பொங்கிய' இ.பி.எஸ்.,
/
கொள்ளையடித்ததே தி.மு.க., அரசின் சாதனை: பொங்கல் விழாவில் 'பொங்கிய' இ.பி.எஸ்.,
கொள்ளையடித்ததே தி.மு.க., அரசின் சாதனை: பொங்கல் விழாவில் 'பொங்கிய' இ.பி.எஸ்.,
கொள்ளையடித்ததே தி.மு.க., அரசின் சாதனை: பொங்கல் விழாவில் 'பொங்கிய' இ.பி.எஸ்.,
ADDED : ஜன 16, 2024 11:39 AM
மேட்டூர்; ''தமிழகத்தில் இரண்டரையாண்டு ஆட்சியில், கொள்ளை அடித்ததே திமுக அரசின் சாதனையாக உள்ளது,'' என்று, சேலத்தில் நடந்த பொங்கல் விழாவில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பேசினார்.
அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் ஒன்றியம் திண்டமங்கலம் மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று, 108 பானைகளில் அரிசியிட்டு பண்டிகையை துவக்கி வைத்தார். ஓமலுார் எம்.எல்.ஏ.,மணி தலைமையில் நடந்த வரவேற்பு விழாவில், இருமாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் இ.பி.எஸ்., அமர வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அழைத்து வரப்பட்டார். பின் விழா மேடையில் மக்களுக்கு சேலை, வேட்டி, சலவை பெட்டி உள்ளிட்டவை வழங்கி இ.பி.எஸ்., பேசியதாவது:
இரண்டரையாண்டு, தி.மு.க., ஆட்சியில் மக்கள் என்ன நன்மை அடைந்தனர். கொள்ளை அடித்ததுதான் அவர்களின் சாதனை. கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறைக்கு செல்ல உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் கடும் வறட்சி நிலவியபோதும், புயல் பாதிப்பின் போதும் மக்களை பாதுகாத்தோம். இன்று மிக்ஜாம் புயலில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில், குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகளை துார்வாரி இலவசமாக வண்டல் மண் எடுத்து செல்ல அனுமதித்தோம். தமிழகம் முழுவதும், 2,000 'அம்மா மினி கிளினிக்' திறந்தோம். அத்தனையும் நிறுத்தி விட்டனர். ஏழை மாணவர்களுக்கு லேப்டாப் தந்தோம். அதையும் தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. அ.தி.மு.க., ஆட்சியின் அனைத்து திட்டங்களையும் நிறுத்தியதுதான் இந்த அரசின் சாதனை.விவசாயிகளுக்காக தலைவாசலில், 1,000 கோடி ரூபாயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தந்தோம். அதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை.
வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்த அரசுக்கு பாடமாக இருக்க வேண்டும். தமிழகத்தின், 39 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்று பெற்று, இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.