ADDED : ஜூன் 03, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி, காரிப்பட்டி அடுத்த அக்ரஹார நாட்டாமங்கலம் அருகே, ஏரிபுதுார் பகுதியில் சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அஸ்வினி, 30. நேற்று காலை, 10:30 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அனுமதி இன்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை மறித்த போது, லாரி டிரைவர் தப்பி சென்றார். பின், பறிமுதல் செய்த டிப்பர் லாரியை காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்து, புகார் கொடுத்தார்.
காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பிச்சென்ற டிரைவரை தேடுகின்றனர்.